தில்லுமுல்லு சாமியார் ஆவது எப்படி? - நகைசுவை!

தில்லுமுல்லு சாமியார் ஆவது எப்படி?

சரி இப்போது வித்தைக்கு வருவோம்.

தேவையானவைகள்
1. உங்களின் ஞாபகசக்தி,
2. நம்பிக்கையான மூன்று சிஷ்யர்கள்
3. ஒரு பெரிய தாம்பாளத் தட்டு
3. பூக்கள் பக்தர்களின் காதுகளின் வசதிக்கேற்ப.
5. நல்ல பழங்கள்(கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கும் பக்தனுக்கு ஒரு வாழைப் பழமாவது கொடுக்க வேண்டாமா?)

சாமியார் ஒரு அறையிலும் பக்தர்கள் மற்றொரு அறையிலும், சுவாமிகளின் பூஜை முடிவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களுடன் சாமியார்களின் வேஷம் போட்ட இரண்டு சீடர்களும் பாலோடு கலந்த தண்ணீர் போல ஒன்னுமே தெரியாதது போல பவ்யமாக இருக்க வேண்டும்.

மற்றொரு சீடர் அவர்களிடம் இருந்து குறிப்புகள் எழுதிய சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சுவாமிகள் பூஜையை முடித்தவுடன் அனைவரும் மொத்தமாக சுவாமிகளின் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். மூன்றாவது சீடர் குறிப்புகள் எழுதிய சீட்டுகளை சுவாமிகளின் முன்னால் பவ்யமாக வைக்க வேண்டும்.

இப்போது சுவாமிகள்(அட நீங்க தாங்க) பிடித்த கடவுளை வணங்கி விட்டு முதலில் ஒரு சீட்டை எடுத்து ஞானதிருஷ்டியால் உங்களின் முதல் 'ஆமாம் சாமி' சீடரின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். சீட்டைப் பிரிக்காமலேயே அவரின் விபரங்களை புட்டுப் புட்டு(சாப்பிடுற புட்டு இல்லீங்க) வைக்க வேண்டும். கடைசியாக சீட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் அவருடன் பேசிக் கொண்டே சீட்டில் எழுதியிருக்கும் குறிப்புகளைப் படித்து ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தச் சீட்டு அங்கு அமர்ந்திருக்கும் யாருடைய சீட்டாகவாவது இருக்கலாம். பின்னர் பின்னால் நிற்கும் மூன்றாவது சீடரிடம் கொடுத்துவிட வேண்டும்.

சிறிது நேரக் கழித்து மூன்றாவது சீடர் மூலம் அடுத்த சீட்டை எடுத்துத்தரச் சொல்ல வேண்டும். சீட்டைப் பிரிகாமலேயே முதல் சீடர் எடுத்துக் கொடுத்த சீட்டின் விபரங்களை வைத்துக் கொண்டு அடுத்த பக்தரை அழைக்க வேண்டும். ஞாபகத்தில் உள்ள விபரங்களின் முலம் குறி சொல்லிக் கொண்டே அவர் எடுத்துக் கொடுத்த சீட்டைப் பிரித்துப் படிக்க வேண்டும்.அவரை அனுப்பி விட்டு அடுத்த சீட்டை எடுக்க வேண்டும். இப்படியே தொடந்து நீங்கள் களைப்படையும் வரை நாள் முழுவதும் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

இடையில் முந்தய சீட்டின் விபரங்கள் மறந்து விட்டால் கூட்டத்தில் இருக்கவே இருகிறார் உங்களின் இரண்டாவது சீடர். அவரை அழைத்து விளையாட்டைத் தொடருங்கள். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து திறமையை வளர்த்துக் கொண்டு திறமையாகப் பெரிய அளவில் செய்யலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். இவை யாவும் விழிப்புணர்ச்சிக்காகவும் நகைச்சவைக்காகவும்  சொல்லப்பட்ட விஷயங்கள்! நீங்கள் கடைப்பிடித்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல!
தில்லுமுல்லு சாமியார் ஆவது எப்படி? - கோடீஸ்வர யோகம்

 குரு 9ல் இருந்தால் தரும் யோகம் ! 
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப் பயலே
நாம வாடி வதங்கி வளப் படுத்துறோம் வயலை
தானியமெல்லாம் வலுத்தவனோடை கையிலே - இது
தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியேல்லை - அதாலை

மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறையை மறந்து மேலே பார்க்குது பதரு - அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலை - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே

மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே - எதுக்கும்
ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே
புூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப் பயலே - உன்னைப்
புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப் பயலே

மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை