குரு 9ல் இருந்தால் தரும் யோகம் !

குரு 9ல் இருந்தால் தரும் யோகம் !
 குரு ஒன்பதாவது வீட்டில் ஒருவர்க்கு அமைந்தால் அந்த நபர் சிறந்த பாக்கியம் உடையவராக திகழ்வார். ஒரு சில ஜாதகருக்கு இப்படி அமைவது உண்டு. அதாவது ஒன்பதாவது வீடு நட்பு வீடாக அமைந்து தீயகிரகங்கள் பார்வை இல்லாமல் இருக்கும்பொழுது அதிகப்படியான நன்மைகளை வாரி வழங்கும். ஒரு சிலருக்கும் ஒன்பதாவது வீட்டில் தனித்து அமர்ந்து இருந்தால் ஒரு சில ஜாதகங்களில் மட்டும் நன்றாக பாக்கியம் அமைவதில்லை அதாவது நல்ல பலனை தருவதில்லை. ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசப்படும். அதில் ஒன்று இப்படிப்பட்ட பலன்களை வழங்குகிறது. குரு ஒன்பதாவது வீட்டில் அமைந்த நப்களுக்கு பொதுவான பலன்களாக அவர்கள் சிறந்த நடத்தையை உடையவர்களாக திகழ்கின்றார்கள். நல்லவர்களாக அதுவும் அனைவருக்கும் பயன்படுபவராக இருக்கின்றனர். ஒரு வேலை இப்படிப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைகின்றது என்று நினைக்கிறேன். தந்தை செய்யும் நன்மை கண்டிப்பாக வாரிசுகளுக்கு வரும் என்று நம்பிக்கையோடு சொல்லலாம். ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து குரு தசா அல்லது அதனின் புத்தி நடைபெறும் காலத்தில் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். ஒன்பதாவது வீட்டில் குரு அமர்ந்து தசாவை நடத்தினாலும் ஒரு சிலர் மட்டுமே தர்ம காரியங்களில் அதிக நாட்டம் ஏற்பட்டு தர்மம் செய்கின்றனர்.


எருமையின் விலை ரூ.7 கோடி: உணவுக்காக தினமும் ரூ.5,000 செலவு


ஹைதராபாத்தில் யாதவர்கள் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒரு எருமையின் விலை ரூ.7 கோடி. இதற்கு உணவுக்காக மட்டும் தினமும் ரூ.5,000 செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஹரியாணா மாநிலம் குருஷேத்திரத்தை சேர்ந்த கர்ம்வீர் சிங் என்பவருக்கு சொந்தமான உயர் ரக இனத்தைச் சேர்ந்த எருமையின் பெயர் ‘யுவராஜ்’. 2007-ம் ஆண்டு பிறந்த இது 1,600 கிலோ எடையும் 6.5 அடி உயரமும், 14 அடி நீளமும் கொண்டது. இதற்கு தினமும் 15 கிலோ ஆப்பிள், பிஸ்தா, முந்திரி, திராட்சை, பால், கேரட், வெல்லம்உட்பட மாட்டு தீவனமும் உணவாக வழங்கப்படுகிறது. இதற்காக தினமும் ரூ. 5 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது.

இதன் உயிரணு (விந்து) வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பெரும் கிராக்கி உள்ளது. இதுவரை ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல எருது போட்டிகளில் பங்கேற்றுள்ள யுவராஜ், பரிசுகளையும், விருதுகளையும் வென்றுள்ளது. இப்போது ஹைதராபாத்தில் யாதவ சமூகத்தினர் நடத்தும் ‘சதர்’ விழாவில் இந்த எருது பங்கேற்றுள்ளது. இதன் விலை ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது. இந்தத் தொகையைக் கொடுத்து எருமையை வாங்க சிலர் முன் வந்துள்ளனர். எனினும் கர்ம்வீர் சிங் மறுத்துள்ளார்.

இந்த எருதை குருஷேத்திரத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு கொண்டு வருவதற்கு ரூ. 5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆசையால் நேர்ந்த கொடுமை  - குரு 9ல் இருந்தால் தரும் யோகம் !
 சமூக சிந்தனை - அவலம் -கற்பனைகள்