குறட்டையால் ஏற்படும் தொல்லைகள் யாவை?

பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் சிலர் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்து இருப்பவர்களுக்கு தொல்லை தரும். குறட்டை விடுபவர் நன்றாக உறங்க முடியாது.  குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது. உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

குறட்டையால் ஏற்படும் தொல்லைகள்   குறட்டை ஏன் வருகிறது?
குறட்டையை தவிர்க்க  நல்ல வழிகள்